Thursday, January 25, 2018

மூடத் தயாராகும் பொறியியல் கல்லூரிகள்!!!

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறைந்ததால் 
தமிழகத்தில் 17 கல்லூரிகள் வருகிற கல்வியாண்டில் (2018-19) மூடப்படுகின்றன.

தமிழகம் முழுதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற வேண்டிய கடைசி நாள் கடந்த ஜனவரி 21ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் என்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர், எம்.பி.ஏ, எம்.சி.ஏ என 600 கல்லூரிகள் உள்ளன. இதில் 12 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடுவதற்கு விண்ணப்பித்துள்ளன. அதேபோல் 5 எம்பிஏ கல்லூரிகள் வருகிற கல்வி ஆண்டு பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், "இந்த வருடம் பல பொறியியல் கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் சரண்டர் செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், தகவல் தொழில்நுட்பம் பாடப் பிரிவுகள் இதில் அடங்கும். கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் சரண்டர் செய்ய விரும்புகின்றன" என்றனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான மோகம் கடந்த சில வருடங்களாகப் படிப்படியாகக் குறைந்துவருகின்றன. வெளிநாடுகளிலும் என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்தன. சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் உள்ள கல்லூரிகளில் மட்டுமே மாணவர்கள் சேருகிறார்கள். இதனால் ஆண்டுக்கு 2 லட்சம் பொறியியல் இடங்கள் நிரம்பாமல் காலியாகக் கிடக்கின்றன. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்துவருவதால் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

No comments:

Post a Comment