Friday, December 2, 2016

திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு

வேலுார்: 'முதல் பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர், முருகன் தெரிவித்துள்ளார்.

Tuesday, November 29, 2016

’கல்லூரி காலங்கள்’ ; போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள்

பொதிகை தொலைக்காட்சியில், கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும், ’கல்லுாரிக் காலங்கள்’ என்ற நிகழ்ச்சியில், போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன. 

Tuesday, November 22, 2016

தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு | தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிசம்பர் 7-ம் தேதி வரை சேரலாம் என்று இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Friday, November 4, 2016

யு.ஜி.சி., தடைக்கு ’ஸ்டே’ வாங்கியது பெரியார் பல்கலை..

.சேலம், பெரியார் பல்கலையில், 2001ல்,தொலைதூர கல்வி மையமான பிரைடு துவங்கப்பட்டது.

சான்றிதழில் கல்வி நிலை : பல்கலைகளுக்கு உத்தரவு

'வரும் ஆண்டுகளில், பட்ட சான்றிதழில், தொலைநிலை கல்வி குறித்து குறிப்பிட வேண்டும்' என, பல்கலைக் கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.

Monday, October 31, 2016

டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில் சேரதமிழக பல்கலைகளுக்கு உத்தரவு

மத்திய அரசின் டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில், மாணவர்களின் சான்றிதழ் விபரங்களை பதிவு செய்யும்படி, தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Thursday, October 20, 2016

10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு

கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10 நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

Sunday, October 16, 2016

இனி தமிழில் 'இக்னோ' பல்கலை படிப்புகள் : துணைவேந்தர் தகவல்

மதுரை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் (இக்னோ) மண்டல மையத்தில் தென்மண்டல இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்கலையின் துணைவேந்தர் ரவிந்தரகுமார் பங்கேற்றார். அவர் கூறியதாவது:

Tuesday, October 4, 2016

கலை கல்லூரிகளுக்கான கட்டணம்:பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை..

.வரும் கல்வி ஆண்டிலாவது, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்' என, பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

Friday, September 30, 2016

ஆன்லைன் படிப்பு; யு.ஜி.சி., அனுமதி

அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும் என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

Tuesday, September 27, 2016

பந்தாடப்படும் கல்லூரி கல்வி இயக்குனர் பதவி!

தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக பந்தாடப்படுகிறது.

Tuesday, September 20, 2016

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,500 பேராசிரியர் இடங்கள் காலி.


அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, வகுப்புகள் முடங்கி உள்ளன

Saturday, September 10, 2016

சென்னை பல்கலை முதுநிலை படிப்பு ’ரிசல்ட்’ நாளை வெளியீடு

சென்னை பல்கலையில்முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுநாளை வெளியாகிறது. 

தொலை நிலைக்கல்வி மைய தேர்வில் முறைகேடு!

மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ்,தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதால்விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளதாகஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்பல்கலை பதில் மனு தாக்கல் செய்தது. 

Friday, September 9, 2016

மத்திய பல்கலைகளில் சேர நுழைவுத்தேர்வு; அரசு ஆலோசனை!

நாடு முழுவதும் உள்ள, 40க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைகளுக்கு, பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

Wednesday, August 31, 2016

கல்லூரிகளுக்கான ’நாக்’ தர வரிசையில் மாற்றம்

கல்லுாரிகளுக்கான, உயர் கல்வி தேசிய மதிப்பீடு தரவரிசை முறையில், திடீர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Friday, August 19, 2016

பல்கலைகளுக்கு ’கிடுக்கிப்பிடி’; மத்திய அரசு உத்தரவு

கல்லுாரி மற்றும் பல்கலைகளின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 33 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு, பல்கலைகளின் துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு, மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sunday, August 14, 2016

கல்லூரி, பல்கலைகளுக்கு யு.ஜி.சி.,யின் உத்தரவு

கல்லூரி மற்றும் பல்கலைகளில் பாடத்திட்ட படிப்புகள் மட்டுமின்றி மற்ற பாடங்களையும் படிக்கும் வகையில் விருப்ப பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Monday, June 27, 2016

அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல் வெளியாகுமா?

இன்று துவங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 1.30 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Friday, June 3, 2016

மகளிர் கல்லூரி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தேர்வு கட்டுப்பாட்டாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Monday, May 30, 2016

முடிவு தெரியாமல் தவிக்கும் மதுரை காமராஜ் பல்கலை மாணவர்கள்

 மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் 2014 - 15ம் ஆண்டில் 1,916 மாணவர்கள் நேரடி சேர்க்கை மூலம் தேர்வு எழுதினர். இதில் பலர் போலி சான்றிதழ் சமர்ப்பித்தனர். அதற்காக தொலைக் நிலைக் கல்வி மையங்களுக்கும், பல்கலையின் முக்கிய நபர்கள் சிலருக்கும் பல லட்சம் ரூபாய் கைமாறியதாக புகார் எழுந்தது

Friday, May 27, 2016

கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர கோரிக்கை


கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sunday, May 22, 2016

மாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை; யு.ஜி.சி., எச்சரிக்கை

எந்த காரணத்தை கொண்டும் மாணவர்களின் சான்றிதழ்களை நிறுத்தி வைக்கக் கூடாது என, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.

Friday, May 20, 2016

கூவி... கூவி விக்கிறாங்க! எம்.பில்., பட்டம் ரூ. 2 லட்சம்!

மதுரை காமராஜ் பல்கலை மாலை நேர கல்லுாரி மற்றும் தொலைநிலைக்கல்வி மையங்களில் எம்.பில்.மற்றும் எம்.ஏ.பட்டம் வழங்குவதில் லட்சக்கணக்கான ரூபாய் பேரம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Monday, May 16, 2016

யு.ஜி.சி., நிதியை பயன்படுத்தாத தமிழக பல்கலைகளுக்கு சிக்கல்

சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்கள், நான்கு ஆண்டுகளாக, யு.ஜி.சி., யின் நிதியை பயன்படுத்தாதது தெரிய வந்துள்ளது.

யு.ஜி.சி., நிதியை பயன்படுத்தாத தமிழக பல்கலைகளுக்கு சிக்கல்

சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்கள், நான்கு ஆண்டுகளாக, யு.ஜி.சி., யின் நிதியை பயன்படுத்தாதது தெரிய வந்துள்ளது.

Saturday, May 14, 2016

அரசு மகளிர் கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம்

சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

Tuesday, May 10, 2016

கணிதம் படிக்க ஆர்வம் வேண்டும்!

கணிதத் துறையில் தேசிய விருது பெற்றிருக்கும்இணைப் பேராசிரியர் சிவராமன்: 
கணிதம் படிப்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வமில்லாமல் இந்தப் படிப்பில்

Thursday, May 5, 2016

சென்னைப் பல்கலை: தொலைநிலை கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.


சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

'தனியார் கல்லூரிக்கான கட்டணங்களை நிர்ணயிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது'


'தொழில்முறை கல்வி அளிக்கும் தனியார் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை மற்றும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, முறைப்படுத்த, மாநில அரசுகளுக்குஅதிகாரம் உள்ளது' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Monday, May 2, 2016

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது

Monday, April 18, 2016

சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு.

சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது

Sunday, April 10, 2016

தமிழக பல்கலை வரலாற்றில் புது முயற்சி; ’ஆன்லைன்’ தேர்வு நடத்த திட்டம்

தமிழக பல்கலைகளில் முதல்முறையாக, ஆன்லைன் தேர்வு முறையை, சென்னை பல்கலை அறிமுகப்படுத்த உள்ளது.

Thursday, April 7, 2016

ஆபாச நடன பிரச்னையால் கல்லூரி முடங்கியது!

மாநில கல்லுாரி விடுதியில் நடந்த ஆபாச நடன சம்பவத்தில் பங்கேற்றமுதல்வர் மற்றும் விடுதி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபேராசிரியர்கள்மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

’கந்துவட்டி’ பாணி கட்டண வசூலில் காமராஜ் பல்கலை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட தனியார் மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளின் பாடத்திட்ட அனுமதிக் கட்டணம் வசூலிக்ககந்துவட்டி பாணியில் பல்கலை நிர்வாகம் செயல்படுவதால்,பல லட்சம் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

கல்லூரி முதல்வருக்கு கல்லறை; மாணவர்கள் மீது வழக்கு!

கேரளாவில்கல்லுாரியில் முதல்வராக பணியாற்றிஓய்வு பெற்றவருக்குமாதிரி கல்லறை எழுப்பிமலர் அஞ்சலி செலுத்திய மாணவர்களுக்கு எதிராகவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Monday, March 28, 2016

மதிப்பிழக்கிறதா சென்னை பல்கலை?

சென்னை பல்கலைக்கு இருந்து வந்த, நூற்றாண்டு கடந்த பாரம்பரிய கவுரவம், வன்முறை சம்பவங்களால், நாளுக்கு நாள் குறைந்து வருகிற

Friday, March 25, 2016

சட்டசபை தேர்தலால், அனைத்து பல்கலைகளிலும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன

. மே மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் மே, 16ல் நடக்கிறது

Thursday, March 24, 2016

சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை

சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த, க்யூ.எஸ்., எனப்படும், 'க்

Friday, March 18, 2016

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

 சென்னை பல்கலையின் தொலைநிலைக் கல்வி தேர்வுகள், 2015 டிசம்பரில் நடந்தன.

Monday, March 14, 2016

சென்னை பல்கலை தேர்வு: மறு கூட்டல் 'ரிசல்ட்' அறிவிப்பு

சென்னை பல்கலை தேர்வு மறு கூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன. சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட

Tuesday, March 8, 2016

பட்டம் பெற பல ஆண்டுகள் படித்தோரும் பேராசிரியர்கள்..! அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அவலம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களின் தகுதி குறித்து பல்வேறுபுகார்கள் தொடர்ந்து எழுந்து

பிஎச்.டி., ஆய்வு காலத்தை அனுபவத்தில் சேர்க்க அனுமதி

.
பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது

Thursday, February 25, 2016

அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வி தேர்வு முடிவுகள்

காரைக்குடி அழகப்பா பல்கலை கழக தொலை நிலை கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Friday, February 19, 2016

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலையில்நவம்பரில் நடந்த தேர்வுகளின் முடிவுகள்இன்று வெளியாகின்றன.

Tuesday, February 16, 2016

அரசு கலைக் கல்லூரியில் ’அரியர்’ விண்ணப்பம் வரவேற்பு

கோவை அரசு கலைக் கல்லுாரியில்அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 29ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை, 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Monday, February 15, 2016

ஆசிரியர்கள் வழிகாட்டுதலே மாணவர்களை முன்னேற்றும்பிப்ரவரி

ஆசிரியர்களின் வழிகாட்டுதலே மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்என, கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசினார்

Sunday, February 14, 2016

துணைவேந்தர் தேர்வு; குவிகிறது சிபாரிசு!

சென்னை பல்கலை துணை வேந்தர் பதவி, ஒரு மாதமாக காலியாக உள்ளது.

உயர்கல்வியில் தமிழகம் முதலிடம்: யு.ஜி.சி., துணைத்தலைவர் பாராட்டு

'முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அனுமதியளித்த சுயநிதிக்கல்லுாரிகள் திட்டத்தால், தமிழகம் உயர்கல்வித்துறையில் இன்றைக்கு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது,''

Thursday, February 11, 2016

உயர்கல்வி கட்டணம் அரசு ஏற்க வலியுறுத்தல்

மருத்துவம்பொறியியல்சட்டம் போன்ற உயர்கல்வி பயிலும்,எம்.பி.சி.மாணவர்களின் கட்டணங்களை அரசு ஏற்க வேண்டும்எனமிக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

உதவி பேராசிரியர்கள் நியமனம் தற்காலிகமாக நிறுத்தம்

 தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் 111 பேருக்கு அரசு கல்லூரியில் இடம்!

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்., கல்லுாரியில் படித்த, 111 மாணவர்களுக்கு, அரசு கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது.

Monday, February 8, 2016

பல்கலைகளில் யோகா பாடம்: மத்திய அரசு புதிய திட்டம்**

பல்கலை கழகங்களில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., யோகா பாட பிரிவுகளை துவக்க, பல்கலை கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் மாணவர் சேர்க்கை நடக்காது?

ஆன்லைன் முறையில், மாணவர் சேர்க்கை நடத்த பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக கல்லுாரிகளில் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

Saturday, February 6, 2016

சான்றிதழை மறுப்பதா: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

'கட்டண பாக்கி பிரச்னையால், மாணவர்களுக்கு வழங்காமல் வைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்' என, இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

Monday, February 1, 2016

'செட் தேர்வு குளறுபடி நீக்காவிட்டால் வழக்கு'

கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, பிப்., 21ல் நடக்கிறது. இந்த தேர்வு நடைமுறையிலுள்ள குளறுபடிகளை நீக்க, முதுகலை பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

'தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, பணியில் இருப்பவர்கள் கேட்க முடியாது'- சென்னை உயர் நீதிமன்றம்

எஸ்.ஐ., பணிக்கான தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை வழங்கக் கோரி, போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Wednesday, January 27, 2016

'ராகிங் மற்றும் பாலியல் கொடுமை உட்பட, கல்லுாரி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தடுக்க, ஐந்து வகையான கமிட்டிகளை கட்டாயம் அமைக்க வேண்டும்'


'ராகிங் மற்றும் பாலியல் கொடுமை உட்பட, கல்லுாரி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தடுக்க, ஐந்து வகையான கமிட்டிகளை கட்டாயம் அமைக்க வேண்டும்' என, இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நிபந்தனை விதித்துள்ளது.

Monday, January 25, 2016

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை


1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- 1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம்பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமானகட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.

Friday, January 22, 2016

கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டம்: 2.84 லட்சம் மாணவர்கள் பயன்

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் 2.84 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார். இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:

Wednesday, January 20, 2016

பேராசிரியர் நியமனம்; இன்ஜி., கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களை பணி அமர்த்துவது தொடர்பாக, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.

Friday, January 15, 2016

கட்டணத்துக்காக மாணவர்களின் சான்றிதழ் பறிப்பு!: தனியார் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

'கட்டண பாக்கிக்காக மாணவர்களின் சான்றிதழை பிடித்து வைத்துக் கொள்ளும், கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

Monday, January 11, 2016

'செட்' தேர்வில் முறைகேடுக்கு வாய்ப்பு

'உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வை, துணைவேந்தரே இல்லாத பல்கலை நடத்துவதால், முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது; தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Saturday, January 9, 2016

அண்ணா பல்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தலாம்

. பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மண்டல அண்ணா பல்கலை விரிவுரையாளர் பிரபாகர் தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையின் 13 உறுப்புக் கல்லுாரிகள், 3 மண்டல கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப, பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் இனசுழற்சி முறை சரியாக பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீடு முறையில் உள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. எங்களைப் போல் பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பதிவாளர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பிரபாகர் மனு செய்திருந்தார்.
திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலை உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், அண்ணா பல்கலை பதிவாளர் 102 பேராசிரியர், 178 இணை பேராசிரியர் பணியிடங்களை விதிகளுக்குப் புறம்பாக, நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டார். அதை ரத்து செய்து 75 சதவீதம் பதவி உயர்வு, 25 சதவீதம் நேரடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும், என மனு செய்திருந்தார்.
நீதிபதி டி.ஹரிபரந்தாமன், நேர்காணல் நடத்தலாம். ஆனால், பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. பின்னடைவு பணியிடங்கள் எவ்வளவு என்பதை ஜன.,18 ல் பல்கலை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும், என்றார். உயர்கல்வித்துறை செயலர், பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் வழக்கறிஞர்கள் லஜபதிராய், அருள்வடிவேல், பல்கலை வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜராயினர்

Saturday, January 2, 2016

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்தவசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.