Friday, September 9, 2016

மத்திய பல்கலைகளில் சேர நுழைவுத்தேர்வு; அரசு ஆலோசனை!

நாடு முழுவதும் உள்ள, 40க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைகளுக்கு, பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்குஅடுத்த ஆண்டு முதல்பொது நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில்நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைகளில் மாணவர்களை சேர்ப் பதற்கும்,பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
100 சதவீத கட் - ஆப்:
தற்போதுஹரியானாஜம்மு - காஷ்மீர்ஜார்க் கண்ட்கேரளாராஜஸ்தான் மற்றும் தமிழகத் தில் உள்ள மத்தியப் பல்கலைகளுக்கான மாணவர் சேர்க்கைதேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே நடக்கிறது. இதைத் தவிரபல்வேறு மத்தியப் பல்கலைகள் தனித் தனியாக நுழைவுத் தேர்வை நடத்துகின்றன.
அதே நேரத்தில்டில்லி பல்கலையில்பிளஸ் 2  தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. சில குறிப்பிட்ட படிப்புகளுக்கான கட் - ஆப் மதிப்பெண், 100 சதவீதம் வரை உள்ளது. இதனால்பிளஸ் 2 தேர்வில், 95 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர் கள் கூட,பல்கலையில் சேர முடிவதில்லை.
இதை தவிர்க்கபொது நுழைவுத்தேர்வு முறையை விரைவில் அமல்படுத்துவது குறித்து ஆராயப் படுகிறது. இது தொடர்பாகமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
துணைவேந்தர்கள் கூட்டம்
அடுத்த மாதம், 6ம் தேதி நடக்க உள்ள மத்தியப் பல்கலை துணைவேந்தர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதுஎனமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு சிக்கல்
பிளஸ் 2 தேர்வைத் தொடர்ந்துமத்தியப் பல் கலை நுழைவுத் தேர்வுக்கும் மாணவர்கள் தயா ராக வேண்டும் என்ற சிக்கல் உள்ளது. இதனால்டியூஷன் சென்டர்கள் கொள்ளையடிக்கும் வாய்ப்பு உள்ளது எனகல்வி நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில்சிலமத்தியப் பல்கலை மற்றும் வேறு சில பல்கலைகளில்ஏற்கனவே நுழைவுத் தேர்வு உள்ளது. இதற்காக தனித்தனியாக விண் ணப்பிக்க வேண்டிய நிலையில் இருந்து மாணவர்கள் தப்பிப்பர். மேலும் தகுதி உள்ள மாணவர்களு க்குமத்தியப் பல்கலைகளில் இடம் கிடைக்கும்&' எனசில நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாற்றம் ஏற்படுத்திய தமிழகம்
டில்லி பல்கலைபிளஸ் 2 மதிப்பெண் அடிப் படை யிலேயே மாணவர்களை சேர்க் கிறது. டில்லியில் மிகப் பிரபலமானடில்லி பல்கலைக்கு உட்பட்ட ஸ்ரீ ராம் கல்லுாரியில்இந்த ஆண்டு, 188 பேர் சேர்க்கப்பட்டனர். இதில், 129 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்அதில், 33 பேர்ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள். அதிக மதிப்பெண்கள் அடிப்படை யில் இவர்கள் சேர்ந்தாலும்இது கல்வியாளர் கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும் என்றுதேர்வு தாள்களை திருத்தும் போது மிகவும் தாராளமாக நடந்து கொள்வ தாகவும் கூறப்படுகிறது. இதனால்தகுதி உள்ள மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்பதால் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து தற்போது ஆராயப்படுகிறது.

No comments:

Post a Comment