Wednesday, January 27, 2016

'ராகிங் மற்றும் பாலியல் கொடுமை உட்பட, கல்லுாரி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தடுக்க, ஐந்து வகையான கமிட்டிகளை கட்டாயம் அமைக்க வேண்டும்'


'ராகிங் மற்றும் பாலியல் கொடுமை உட்பட, கல்லுாரி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தடுக்க, ஐந்து வகையான கமிட்டிகளை கட்டாயம் அமைக்க வேண்டும்' என, இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நிபந்தனை விதித்துள்ளது.

Monday, January 25, 2016

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை


1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- 1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம்பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமானகட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.

Friday, January 22, 2016

கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டம்: 2.84 லட்சம் மாணவர்கள் பயன்

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் 2.84 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார். இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:

Wednesday, January 20, 2016

பேராசிரியர் நியமனம்; இன்ஜி., கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களை பணி அமர்த்துவது தொடர்பாக, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.

Friday, January 15, 2016

கட்டணத்துக்காக மாணவர்களின் சான்றிதழ் பறிப்பு!: தனியார் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

'கட்டண பாக்கிக்காக மாணவர்களின் சான்றிதழை பிடித்து வைத்துக் கொள்ளும், கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

Monday, January 11, 2016

'செட்' தேர்வில் முறைகேடுக்கு வாய்ப்பு

'உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வை, துணைவேந்தரே இல்லாத பல்கலை நடத்துவதால், முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது; தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Saturday, January 9, 2016

அண்ணா பல்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தலாம்

. பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மண்டல அண்ணா பல்கலை விரிவுரையாளர் பிரபாகர் தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையின் 13 உறுப்புக் கல்லுாரிகள், 3 மண்டல கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப, பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் இனசுழற்சி முறை சரியாக பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீடு முறையில் உள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. எங்களைப் போல் பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பதிவாளர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பிரபாகர் மனு செய்திருந்தார்.
திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலை உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், அண்ணா பல்கலை பதிவாளர் 102 பேராசிரியர், 178 இணை பேராசிரியர் பணியிடங்களை விதிகளுக்குப் புறம்பாக, நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டார். அதை ரத்து செய்து 75 சதவீதம் பதவி உயர்வு, 25 சதவீதம் நேரடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும், என மனு செய்திருந்தார்.
நீதிபதி டி.ஹரிபரந்தாமன், நேர்காணல் நடத்தலாம். ஆனால், பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. பின்னடைவு பணியிடங்கள் எவ்வளவு என்பதை ஜன.,18 ல் பல்கலை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும், என்றார். உயர்கல்வித்துறை செயலர், பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் வழக்கறிஞர்கள் லஜபதிராய், அருள்வடிவேல், பல்கலை வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜராயினர்

Saturday, January 2, 2016

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்தவசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.