Saturday, January 9, 2016

அண்ணா பல்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தலாம்

. பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மண்டல அண்ணா பல்கலை விரிவுரையாளர் பிரபாகர் தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையின் 13 உறுப்புக் கல்லுாரிகள், 3 மண்டல கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப, பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் இனசுழற்சி முறை சரியாக பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீடு முறையில் உள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. எங்களைப் போல் பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பதிவாளர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, பிரபாகர் மனு செய்திருந்தார்.
திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலை உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், அண்ணா பல்கலை பதிவாளர் 102 பேராசிரியர், 178 இணை பேராசிரியர் பணியிடங்களை விதிகளுக்குப் புறம்பாக, நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டார். அதை ரத்து செய்து 75 சதவீதம் பதவி உயர்வு, 25 சதவீதம் நேரடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும், என மனு செய்திருந்தார்.
நீதிபதி டி.ஹரிபரந்தாமன், நேர்காணல் நடத்தலாம். ஆனால், பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. பின்னடைவு பணியிடங்கள் எவ்வளவு என்பதை ஜன.,18 ல் பல்கலை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும், என்றார். உயர்கல்வித்துறை செயலர், பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனுதாரர் வழக்கறிஞர்கள் லஜபதிராய், அருள்வடிவேல், பல்கலை வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜராயினர்

No comments:

Post a Comment