Wednesday, January 20, 2016

பேராசிரியர் நியமனம்; இன்ஜி., கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களை பணி அமர்த்துவது தொடர்பாக, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இதற்கு சில தரப்பில்எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எம்.இ.மற்றும் இன்ஜினியரிங் பிரிவில்பிஎச்.டி.போன்ற ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள்நெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்இன்ஜினியரிங் கல்லுாரிகளில்பேராசிரியர்களாக நியமிக்கப் படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லுாரிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.  அப்போதுஎம்.இ.முடிந்த பேராசிரியர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால்எம்.எஸ்சி.,அல்லது எம்.சி.ஏ.படித்தவர்கள்அதன்பின்எம்.இ.படித்து,இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பேராசிரியர்களாக சேர்ந்தனர்.
இப்படிப்பட்டவர்களால்பாடங்களை முழுமையாக கற்றுத்தர முடியவில்லை எனஏ.ஐ.சி.டி.இ.,க்கு புகார்கள் சென்றன. இதையடுத்துஇன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஆய்வு நடத்தியஏ.ஐ.சி.டி.இ.அமைப்பு,பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது. இதன்படி,இன்ஜினியரிங் கல்லுாரிகளில்பி.இ.படித்துஅதன்பின் எம்.இ.மற்றும் பிஎச்.டி.பட்டம் பெற்றவர்களை மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏ.ஐ.சி.டி.இ.,அறிவிப்பில் பல குளறுபடிகள் உள்ளன. 2010ம் ஆண்டோஅதற்கு முன்னரோஇன்ஜினியரிங் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் போதேஇந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால்படித்திருக்க மாட்டோம்.   மாறாக படித்து முடித்த பின்ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்து புதிய விதிமுறை அமலாகும் என,அறிவித்திருப்பது நியாயமற்றது. வேலை தேடும் பட்டதாரிகள்   
புதிய விதிமுறைகள்
  • கலைஅறிவியல் கல்லுாரிகளில்இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு முடித்துதொடர்ந்துஎம்.சி.ஏ.,அல்லது எம்.எஸ்சி.பட்டம் பெற்றுபின் எம்.இ.தேர்ச்சி பெற்ற வர்களைஇன்ஜினியரிங் கல்லுாரிகளில் பேராசிரியர்களாக நியமிக்க முடியாது
  • அதேபோலபி.இ.முடித்துஎம்.இ.படித்த பட்டதாரிகள்பி.இ.,யில்ஒரு பாடப்பிரிவுஎம்.இ.யில் ஒரு பாடப்பிரிவு எனமாற்றி மாற்றி படித்திருந்தாலும்அவர்களையும் பேராசிரியராக நியமிக்க முடியாது
  • பி.இ., - பி.டெக்.முடித்துஎம்.எஸ்.படித்தவர்களையும்பி.இ.படித்து நேரடியாகஆராய்ச்சி பட்டமான பிஎச்.டி.முடித்தவர்களையும்ஒருங்கிணைந்தஐந்து ஆண்டு பி.இ., -- எம்.பி.ஏ.முடித்தவர்களையும் பேராசிரியர் பணிக்கு அமர்த்தலாம்
  • இதே போல்ஒரே பாடத்தில்இரட்டை பட்டப்படிப்பு முடித்தஎம்.இ.பட்டதாரிகளையும் வேலைக்கு சேர்க்கலாம்
  • 2010ம் ஆண்டுக்குப் பின்பணி அமர்த்தப்பட்டவர் களுக்குஇந்த நிபந்தனைகள் பொருந்தும்.

No comments:

Post a Comment