Thursday, February 11, 2016

மாணவர்கள் 111 பேருக்கு அரசு கல்லூரியில் இடம்!

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்., கல்லுாரியில் படித்த, 111 மாணவர்களுக்கு, அரசு கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம்கள்ளக்குறிச்சி அருகேஎஸ்.வி.எஸ்.இயற்கை மருத்துவக் கல்லுாரியில்மூன்று மாணவியர் மர்மமான முறையில்,கிணற்றில் பிணமாகக் கிடந்தனர். கல்லுாரி மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்ததால்மாவட்ட நிர்வாகம்கல்லுாரியை இழுத்து மூடியது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள்அரசு யோகா - இயற்கை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்படுவர் எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படிமாணவர் சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வுசென்னை,அரும்பாக்கம்அண்ணா சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில்நேற்று நடந்தது. முதலாம் ஆண்டு முதல்பயிற்சி டாக்டர் வரையிலான, 136 மாணவமாணவியர் அழைக்கப்பட்டிருந்தனர்; 112 பேர் பங்கேற்றனர்ஒருவர் கல்லுாரியில் படிக்க விரும்பவில்லை. மீதமுள்ள, 111 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
மாணவியை தாக்க முயற்சிகலந்தாய்வுக்கு வந்த பயிற்சி மாணவி கோட்டீஸ்வரி என்பவரை சுற்றி வளைத்த பெற்றோர்கல்லுாரியில் பணம் வசூலித்தது இவர் தான்எப்படி இங்கு வந்தார் எனக் கூறி,அவரை தாக்க முயன்றனர்அவர்களை போலீசார் தடுத்தனர்.
கோட்டீஸ்வரி கூறுகையில், &'படிப்பை முடித்து பயிற்சியில் இருந்த என்னைஅலுவலகப் பணிக்கு பயன்படுத்திபெற்றோரிடம் பணம் வசூலிக்க வைத்தனர். என் சான்றிதழ் வேண்டும் என்பதால்அவர்கள் சொன்னதை செய்தேன். நானும் உங்களைப்போல் பாதிக்கப்பட்ட மாணவி தான்எனக் கூறி அழுதார்.
எப்போது வந்தாலும் சேர்க்கை 
நேற்றைய கலந்தாய்வில், 2008 முதல், 2015 வரையிலானஅரசுநிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் தரப்பட்டன. 24 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. அவர்கள்,ஒரு வாரத்திற்குள் எப்போது வந்தாலும் கலந்தாய்வில் சேரலாம் எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.
2015 - 16க்கானநிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் குறித்த விவரம் இல்லாததால்கலந்தாய்வில் அனுமதிக்கப்படவில்லை. இதனால்மாணவர் மற்றும் பெற்றோர்அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் மூலம் தகவல் சேகரித்துமீண்டும் சேர்க்கை நடத்தப்படும் எனஅதிகாரிகள் சமாளித்தனர். 
கள்ளக்குறிச்சி கல்லுாரியில் நிகழ்ந்த கொடுமை கொஞ்சம்நஞ்சமல்ல. கல்லுாரி மூடப்பட்டுநிர்கதியாக நின்ற எங்களுக்குஅரசின் கனிவுப் பார்வையால்மருத்துவக் கல்வி மீண்டும் நனவாகி உள்ளது;முதல்வருக்கு நன்றி. இதற்குசக மாணவியர் மூன்று பேரின் உயிரை விலை கொடுத்தது கவலையாக உள்ளது.- மூன்றாம் ஆண்டில் சேர்க்கை பெற்ற மாணவி கலையரசிஅரசு கல்லுாரியில் சேர்ந்ததால் சிக்கல் இல்லை. 
ஆனால்கள்ளக்குறிச்சி கல்லுாரியில் சேரஆறு லட்சம் ரூபாய் கட்டி உள்ளோம். அதற்குமாதம், 30ஆயிரம் ரூபாய் வட்டிகட்டுகிறோம். நாங்கள் கட்டிய பணத்தை திரும்ப கிடைக்கச் செய்தால் நிம்மதி அடைவோம்.- இரண்டாம் ஆண்டில் ஒதுக்கீடு பெற்ற வாணிஸ்ரீ

No comments:

Post a Comment