Monday, February 15, 2016

ஆசிரியர்கள் வழிகாட்டுதலே மாணவர்களை முன்னேற்றும்பிப்ரவரி

ஆசிரியர்களின் வழிகாட்டுதலே மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்என, கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசினார்
.
தமிழக கல்லுாரியில் உள்ள, தேசிய மாணவர் படையினர் இடையே, 3 நாட்கள் நடைபெறும் போட்டிகள், சென்னை, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்தன. போட்டியை துவக்கி வைத்துதமிழக கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது: என்.சி.சி.,யில் சேரும் மாணவ, மாணவியருக்கு, ஒழுக்கம், தலைமை பண்பு இருக்க வேண்டும். முன்னேற்றத்துக்கான அடித்தளமே, அங்கிருந்து தான் துவங்குகிறது.
நான் அரசு பள்ளியில் படித்தபோது, ஒரு ஆசிரியர் தான், எனக்கு என்.சி.சி., உடை கொடுத்து அனுப்பி வைத்தார். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். ராணுவம், காவல் துறையில் எளிதாக சேர கூடிய தகுதியை, தேசிய மாணவர் படை கற்று கொடுக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், ராணுவ அதிகாரி நாயக், சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி மற்றும் நாராயணபெருமாள், தேசிய மாணவர் படை அதிகாரி ஜெய்சங்கர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள, 37 கல்லுாரிகளில் இருந்து, தேசிய மாணவர் படையை சேர்ந்த, 530 பேர் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில், அணிவகுப்பு, தடைதாண்டும் ஓட்டம், வி.ஐ.பி.,க்கள் வரவேற்பு போன்ற, 30க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியில் வெற்றி பெறும் கல்லுாரிகள், டில்லியில் நடைபெறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் தகுதி பெறும். ராணுவ பயிற்சி அதிகாரிகள், போட்டியை முன்னின்று நடத்தினர்.

No comments:

Post a Comment