Friday, August 19, 2016

பல்கலைகளுக்கு ’கிடுக்கிப்பிடி’; மத்திய அரசு உத்தரவு

கல்லுாரி மற்றும் பல்கலைகளின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 33 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு, பல்கலைகளின் துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு, மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில்,பெரும்பாலானவைசீர்மிகு கல்லுாரிதன்னாட்சி அந்தஸ்து எனபல வகைகளில்மத்திய அரசிடம்,பல கோடி ரூபாய் மானியம் பெறுகின்றன. 
ஆனால்கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில்,துணை வேந்தர் நியமனம்பேராசிரியர் நியமனம்,ஆராய்ச்சி மையங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்துவதிலும் முறைகேடுகள் உள்ளதாகபுகார்கள் எழுந்துள்ளன. 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்அனைத்து கல்லுாரிகள்பல்கலைகள்துணைவேந்தர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கும்தனித்தனியே, 10 முதல், 33 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை,பல்கலை மானியக் குழுவானயு.ஜி.சி.அனுப்பியுள்ளது. ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்மத்திய,மாநில அரசிடம் பெறும் நிதி எவ்வளவு போன்ற கேள்விகள் அதில் உள்ளன.
மேலும்நியமனங்கள் முறையாக நடந்ததாநியமனத்திற்கான கல்வித் தகுதி எவ்வளவு என்பன போன்றபலகிடுக்கிப்பிடி விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளதால்துணை வேந்தர்கள்கல்லுாரி முதல்வர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment