Tuesday, May 10, 2016

கணிதம் படிக்க ஆர்வம் வேண்டும்!

கணிதத் துறையில் தேசிய விருது பெற்றிருக்கும்இணைப் பேராசிரியர் சிவராமன்: 
கணிதம் படிப்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வமில்லாமல் இந்தப் படிப்பில்
சேர்ந்தால் நன்றாக படிக்க முடியாது. பி.எஸ்சி., கணிதப் பாடம்ஆறு செமஸ்டர் கொண்ட படிப்பு. இதைப் படித்தால்பிறகு எம்.எஸ்சி., - எம்.பில்., - பிஎச்.டி.படித்தால் ஆசிரியர் பணி நிச்சயம் உண்டு.
பி.எஸ்சி.கணிதம் படித்தவர்கள்அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்டான்செட் தேர்வு எழுதி,எம்.எஸ்சி.,படிக்கலாம். எம்.எஸ்சி.,- ஐ.டி., - எம்.சி.ஏ.,- எம்.பி.ஏ.படிக்கலாம். இதைப் போலவேஐ.ஐ.டி.,நடத்தும்ஜாயின்ட் அட்மிஷன் டெஸ்ட் நுழைவுத் தேர்வு எழுதிஐ.ஐ.டி.,யில்எம்.எஸ்சி.கணிதமும்,பயன்பாட்டியல் கணிதமும் படிக்கலாம்.
இன்று பொறியியல் படிப்பு படித்தாலும்அறிவியல் துறை சார்ந்த இதர படிப்புகள் படித்தாலும்இரண்டு முதல் நான்கு செமஸ்டர் வரை கணிதப் பாடத்தைப் படிக்க வேண்டியிருக்கும். எனவேகணக்குப் படிப்பை வீண் என்று கருதிவிடக் கூடாது.எம்.எஸ்சி.படித்து முடித்தவுடன் அல்லது
படிக்கும் போதுஸ்லெட் மற்றும் நெட் தேர்வுகள் எழுதினால்உதவிப் பேராசிரியர் பணியில் சேரலாம்.கேட் தேர்வு எழுதினால்மாதம், 16 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன்எம்.பில்., - எம்.எஸ்., - பிஎச்.டி.,படிப்புகள் படிக்கலாம். கணிதப் பாடத்தை படித்திருப்பவர்கள் மத்தியமாநில அரசு நிறுவனங்களில் வேலைக்குச் சேரலாம். ஐ.ஏ.எஸ்.போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதலாம். 
பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறலாம். இஸ்ரோபாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மையம் மற்றும்நேஷனல் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் போன்ற வானியல் ஆய்வுத் துறையிலும் வேலைவாய்ப்பை பெறலாம்.
கணிதம் படித்தவர்கள் வங்கி போட்டித் தேர்வுகளிலும்இதர தேர்வு களிலும் எளிதில் வெற்றி பெறலாம். எந்த தொழில்நுட்பம் என்றாலும் கணிதப் பாடத்தின் தேவை இருக்கிறது. கணினி துறையேகணித அல்கோரிதத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. ஆகையால் கணக்கு படித்தவர்கள்ஐ.டி.துறையில் எளிதில் நுழைய முடியும்.
இதர படிப்புகளுடன் ஒப்பிடும் போதுபடிப்புக் கட்டணம் குறைவு. பொதுவாகபி.எஸ்சி.படிக்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புக்குஆண்டுக்கு, 20 ஆயிரம் ரூபாயும்இதரகல்லூரிகளில், 30 ஆயிரம் ரூபாயும் செலவாகும். 
மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் இளநிலை பட்டப் படிப்பு படிக்கலாம் என்றாலும்நீண்ட காலமாக கணிதத்துறை செயல்பாட்டில் உள்ள பெயர் பெற்ற கல்லூரிகளை தேர்ந்தெடுத்து படித்தால்படித்து முடித்தவுடன் உயர் கல்வி வாய்ப்புவேலைவாய்ப்பு போன்றவற்றை பெறும்போது

No comments:

Post a Comment