Thursday, April 7, 2016

’கந்துவட்டி’ பாணி கட்டண வசூலில் காமராஜ் பல்கலை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட தனியார் மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளின் பாடத்திட்ட அனுமதிக் கட்டணம் வசூலிக்ககந்துவட்டி பாணியில் பல்கலை நிர்வாகம் செயல்படுவதால்,பல லட்சம் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இப்பல்கலைக்கு உட்பட்டு, 89 கல்லுாரிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் பல லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு ஏப்ரலில் தேர்வு நடக்கவுள்ளது. இந்நிலையில்அனைத்து கல்லுாரிகளுக்கும் பல்கலை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில்பாடத்திட்டங்களுக்கான அனுமதி கட்டணம் செலுத்தவில்லை என்றால்ஏப்ரலில் நடக்கும் தேர்வுக்கு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்ப முடியாது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2006ம் ஆண்டில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் உயர்த்தப்பட்ட பாடத்திட்ட கட்டணம் விவரம் கல்லுாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என்ற பிரச்னை இருக்கிறது. இந்த சூழ்நிலையில்இதுபோன்ற சுற்றறிக்கை மாணவர்கள் தேர்வை பணயமாக வைத்து, &'கந்துவட்டி கும்பல்&' பாணியில் வந்துள்ளது. இதுகல்லுாரிகளை மிரட்டுவது போல் உள்ளதாக தனியார் கல்லுாரி நிர்வாகங்கள் கடும் அதிருப்தியடைந்தன.
வழக்கு தொடர முடிவு
இந்நிலையில்மதுரையில் இப்பல்கலை தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளின் நிர்வாகிகள் சங்க அவரசக் குழுக் கூட்டம்அதன் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ராஜகோபால்பொதுச் செயலர் பெரீஸ் மகேந்திரவேல்நிர்வாக செயலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவரம்:
இப்பல்கலையில், 2006ல் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனுமதி கட்டண உயர்வான, 1,500ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாய் என்பதை அனைத்து கல்லுாரிகளுக்கும் பல்கலை சார்பில் தகவல் தெரிவிக்கவில்லை. 2014ம் ஆண்டில் தான் தெரிவிக்கப்பட்டது.
உயர்த்தப்பட்ட கட்டணம் அடிப்படையில் ஒரு கல்லுாரிக்குகுறைந்தபட்சம், 10 லட்சம் ரூபாய் முதல் 30லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது. இதை, 2006 முதல் 2014ம் ஆண்டு வரை படித்த மாணவர்களிடம் தான் வசூலிக்க இயலும். ஆனால் அவர்களிடம் வசூலிக்க முடியாது.
இந்நிலையில்ஏப்ரல் தேர்வுக்கு மாணவர்களின்ஹால்டிக்கெட் வழங்க முடியாது என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. இது பல லட்சம் மாணவர்களை பாதிக்கும். தேர்வு எழுத முடியாத பட்சத்தில் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட இந்த சுற்றறிக்கை துாண்டும் விதமாக உள்ளது. மேலும்மாணவர்களுக்கு டிகிரி சான்றிதழ்களும் வழங்க பல்கலை மறுக்கிறது.
உயர்கல்வி துறை செயலர் அபூர்வா இவ்விஷயத்தில் உடனே நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சங்கம் சார்பில்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது எனதீர்மானம் நிறைவேற்றப்பட்ட

No comments:

Post a Comment