Sunday, October 21, 2018

யு.ஜி.சி., முதல் தர பட்டியலில் அழகப்பா பல்கலைக்கு இடம்

பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி யின்றி, தொலைநிலை கல்வி நடத்த, அழகப்பா மற்றும் சாஸ்த்ரா பல்கலைகளுக்கு, சலுகை அளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள்
உள்ளிட்ட, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், யு.ஜி.சி.,யின் அனுமதி பெற்ற பின், படிப்பை நடத்தலாம்.
அனுமதிகல்வி உதவி தொகை, ஆராய்ச்சி உதவி தொகை உள்ளிட்டவற்றுக்கும், யு.ஜி.சி., அனுமதி பெற வேண்டும். அதேபோல, தொலைநிலை கல்வி நடத்த, ஒவ்வொரு பல்கலைக்கும், யு.ஜி.சி.,யில் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், தொலைநிலை கல்விக்கு அனுமதி பெற்ற பல்கலைகளின் பட்டியலை, செப்டம்பரில், யு.ஜி.சி., வெளியிட்டது.
எந்த பல்கலைக்கு, எந்த பாடப்பிரிவை நடத்தலாம் என்ற அனுமதி விபரம் இடம் பெற்றது.இந்நிலையில், முதல் தர மதிப்பீட்டு பட்டியலில் இடம் பெற்ற, 15 பல்கலைகளின் பெயர் பட்டியலை, யு.ஜி.சி., நேற்று அறிவித்தது. இந்த, 15 பல்கலைகளும், யு.ஜி.சி., யின் விதிகளின் படி, &'நாக்&' என்ற, தேசிய தர நிறுவனத்தின், &'ஏ - பிளஸ்&' கிரேடு பெற்ற பல்கலைகள். சலுகைஇந்த பல்கலைகள், யு.ஜி.சி.,யின் அனுமதி பெறாமல், தொலைநிலை கல்வியை நடத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில், தமிழகத்தில் செயல்படும், காரைக்குடி அழகப்பா, தஞ்சாவூர் சாஸ்த்ரா ஆகிய பல்கலைகள் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment